முப்பியூட்டைல்வெள்ளீயம் குளோரைடு
Appearance
பெயர்கள் | |
---|---|
விருப்பத்தெரிவு ஐயூபிஏசி பெயர்
குளோரோமுப்(பியூட்டைல்)இசுடானேன் | |
வேறு பெயர்கள்
முப்பியூட்டைல்குளோரோவெள்ளீயம்
டிபிடிசி | |
இனங்காட்டிகள் | |
1461-22-9 | |
ChEBI | CHEBI:79734 |
ChemSpider | 14368 |
EC number | 215-958-7 |
InChI
| |
யேமல் -3D படிமங்கள் | Image |
KEGG | C15224 |
பப்கெம் | 15096 |
| |
UNII | CA82T4QR5F |
பண்புகள் | |
C12H27ClSn | |
வாய்ப்பாட்டு எடை | 325.51 g·mol−1 |
தோற்றம் | நிறமற்றது, பாகுத்தன்மையுள்ள நீர்மம் |
அடர்த்தி | 1.20 கி·செ.மீ−3 (20 °செல்சியசு |
உருகுநிலை | −9 °C (16 °F; 264 K) |
கொதிநிலை | 171 °C (340 °F; 444 K) |
ஒளிவிலகல் சுட்டெண் (nD) | 1.4903 |
தீங்குகள் | |
பொருள் பாதுகாப்பு குறிப்பு தாள் | External MSDS |
GHS pictograms | |
GHS signal word | அபாயம் |
தீப்பற்றும் வெப்பநிலை | 108 °C (226 °F; 381 K) (மூடிய உச்சி) |
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும் பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும். | |
முப்பியூட்டைல்வெள்ளீயம் குளோரைடு (Tributyltin chloride) என்பது (C4H9)3SnCl என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கரிம வேதியியல் சேர்மமாகும். கரிமவெள்ளீயம் சேர்மமான முப்பியூட்டைல்வெள்ளீயம் குளோரைடு நிறமற்ற நீர்மமாகும். கரிம கரைப்பான்களில் இது கரையும்.
தயாரிப்பு
[தொகு]வெள்ளீயம்(IV) குளோரைடுடன் டெட்ராபியூட்டைல்வெள்ளீயத்தைச் சேர்த்து வினைபுரியச் செய்தால் மறு பங்கீட்டு வினை நிகழ்ந்து முப்பியூட்டைல்வெள்ளீயம் குளோரைடு உருவாகிறது.
- 3 (C4H9)4Sn + SnCl4 → 4 (C4H9)3SnCl
வினைகள்
[தொகு]முப்பியூட்டைல்வெள்ளீயம் குளோரைடு நீராற்பகுப்பு வினைக்கு உட்பட்டு (C4H9)3Sn]2O என்ற ஆக்சைடாக மாறுகிறது.
பயன்
[தொகு]முப்பியூட்டைல்வெள்ளீயம் ஐதரைடு போன்ற பிற கரிமவெள்ளீய சேர்மங்களையும்[1] வினையாக்கிகளையும் தயாரிக்க உதவும் முன்னோடிச் சேர்மமாகப் பயன்படுகிறது.
மேற்கோள்கள்
[தொகு]- ↑ A. F. Renaldo; J. W. Labadie; J. K. Stille (1989). "Palladium-catalyzed Coupling Of Acid Chlorides With Organotin Reagents: Ethyl (E)-4-(4-nitrophenyl)-4-oxo-2-butenoate". Org. Synth. 67: 86. doi:10.15227/orgsyn.067.0086.